To Advertise Contact - christmusicindia@gmail.com

Entha Nilaiyil Naamirunthaalum | எந்த நிலையில் நாமிருந்தாலும்

Loading

எந்த நிலையில் நாமிருந்தாலும்
நம்மை வெறுக்காதவர் நம் இயேசு ஒருவரே
நம் நேசர் ஒருவரே

நோயாளியாய் நாமிருந்தால் பலர் வெறுப்பார்கள்
நம் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த

கடனாளியாய் நாமிருந்தால் பலர் வெறுப்பார்கள்
நம் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த

ஏழையாக நாமிருந்தால் பலர் வெறுப்பார்கள்
நம் ஏழ்மையையே சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த

பட்டம் படிப்பு இல்லையென்றால் பலர் வெறுப்பார்கள்
பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த

அனாதையாய் நாமிருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பை உனக்குத் தாரேன் என்று அலைய வைப்பார்கள் – எந்த

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS