Enthan Iyaesuvae Unthan | எந்தன் இயேசுவே உந்தன்

எந்தன் இயேசுவே உந்தன் நேசமே
எந்தன் உள்ளம் உருகிடுதே
நல்ல பங்கினை நான் அடைந்தேன் திருப்பாதம்
வல்ல பராபரனே சரணம்

சரணங்கள்

அந்த மாது கண்களின் நீரை
அன்பரே உம பாதம் ஊற்றினாளே
என் இதயமே தைலக்குப்பியே
என்னை நொறுக்கி ஒப்படைத்தேன் – எந்தன்

நன்றி என்றும் நான் மறவேனே
நம்பிக்கை கன்மலை என் இறைவா
எந்தன் துணை நீர் என்னை அறிவீர்
எந்தன் பாரம் தாங்கிடுவீர் – எந்தன்

உம்மையன்றி ஆதரவில்லை
உம்முகமே எனக்காறுதலே
கைவிடாமல் காக்கும் கரமே
கண்கள் அதனை நோக்கிடுமே – எந்தன்

மெய் விசுவாச பாதையில் செல்ல
மேன்மை மிகும் அழைப்பை அளித்தீர்
அன்பு, தயவு, ஞானம், பொறுமை
இன்னும் கிருபை ஈந்தருளும் – எந்தன்

கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர்
கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர்
இந்த உதவி என்றும் மறவேன்
இன்ப துதிகள் ஏறெடுப்பேன் – எந்தன்

எந்தன் மேன்மை சிலுவையல்லாமல்
ஏதுமில்லை இந்தப் பாரினிலே
உந்தனுடனே என்னை அறைந்தேன்
உந்தன் குருசில் பங்கடைந்தேன் – எந்தன்

இலக்கை நோக்கி ஓடுகின்றேனே
இலாபமும் நஷ்டமென்றெண்ணுகின்றேன்
ஒன்றே மனதில் உண்டு நினைவில்
சென்றே பரனைக் கண்டிடுவேன் – எந்தன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS