Enthan Iyesu Enakku | எந்தன் இயேசு எனக்கு

எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
அவர் என்றுமே போதுமானவர்

கல்வாரி மலைமேல் ஏறியே
முள் முடி சிரசில் மூடியே
என் வேதனை யாவையும் நீக்கி என்னில்
புது ஜீவனை ஊற்றினதால் – எந்தன்

அவர் ஆதியும் அந்தமுமே
தெய்வ ஸ்நேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிக சிறந்தவரே
துதிக்கப் படத்தக்கவரே – எந்தன்

புவி யாத்திரை மிகக் கடினம்
தேவ கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
அநுதினம் என்னை வழி நடத்தும் – எந்தன்

எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
நான் அவருடன் பறந்திடுவேன் – எந்தன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS