Enthan Jebavelai Umaithedi | எந்தன் ஜெபவேளை உமைதேடி

எந்தன் ஜெபவேளை உமைதேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்

சோராது ஜெபித்திட
ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே
தயை கேட்டு உம் பாதம் வந்தேன் – எந்தன்

உம்மோடு எந்நாளும்
உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்ட காத்திருப்பேனே – எந்தன்

நம்பிக்கை இல்லாமல்
அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவை
போராடி ஜெபிக்கின்றேன் நாதா – எந்தன்

நாளெல்லாம் பாதத்தில்
கர்த்தாவே அமர்ந்திடுவோம்
கண்ணீரின் ஜெபம் கேளுமே
கருணையின் பிரவாகம் நீரே – எந்தன்

சகாயம் பெற்றிட
கிருபாசனம் வந்தேனே
இரக்கங்கள் ஈந்திடுமே
என்றென்றும் தயை காட்டு தேவா – எந்தன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS