Enthan Vaayil Puthupaattu | எந்தன் வாயில் புதுப்பாட்டு

எந்தன் வாயில் புதுப்பாட்டு இயேசு தருகிறார்
எந்தன் உள்ளம் அன்பினால் நிறையுதே
இன்ப இயேசுவே மேகத்தில் வருவார்
எந்தன் துன்பமெல்லாம் அன்று தீருமே
நான் புதுப்பாட்டு என்றும் பாடுவேன்

ஆனந்தம் ஆ! ஆனந்தம்
ஆத்ம நாதனோடு எந்தன் வாசம் ஆனந்தம்

இப்புவியின் இன்பம் எனக்கொன்றும் வேண்டாமே
ரக்ஷ்கானாம்இயேசுவின் சமூகம் போதுமே
தேவ மகிமையில் பறந்து நான் செல்லுவேன்
அக்ஷணத்தில் இயேசு என்னைச் சந்திப்பார்
ஆ! எந்தன் பாக்கியம் யார்க்கும் வர்ணிப்பேன் – ஆ

இலக்கை நோக்கி நான் எந்தன் ஓட்டம் ஓடியே
லாபமான யாவையும் வெறுத்துத் தள்ளினேன்
பெற்றுக் கொள்ளுவேன் நிச்சயம் பிரதி பலன்
ஆ! லக்ஷா லக்ஷ தூதர் முன்பாக
நான் ஜீவ கிரீடம் அன்று சூடுவேன் – ஆ

ஜீவ ஜல நதியிலே தாகம் தீர்ப்பேனே
ஜீவ விருஷத்தின் பலன் நான் புசிப்பேனே
ஜீவ நாயகன் இயேசுவின் கூடவே
ஜீவ பரதீசீல் நானும் இளைப்பாறுவேன்
நான் தூதரோடு அங்கு வாழ்வேன் – ஆ

வீணை வாத்தியக்காரரை நான் காணுவேன்
விண் தூதர் சைன் யத்தையும் அங்கு காணுவேன்
விண்ணதிபனாம் மகிமையின் தேவனை
பொன்னின் முடியோடு அதி வேகம் காணுவேன்
நான் விண்ணிலே பாடிப் போற்றுவேன் – ஆ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS