Eppadi Naan | எப்படி நான்

எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் – உம்மை

இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே

அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே

உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்

என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர் தானையா

வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்

உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே

உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS