எதிர் பார்த்த முடிவைத் தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே
யெகோவா யீரே யெகோவா யீரே
எல்லாமே செய்து முடிப்பீர்
பலத்தால் செய்ய முடியாதய்யா
பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லையையா
பலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல
உம் ஆவியால் செய்து முடிப்பீர்
என்னில் நற்கிரியை தொடங்கியவர்
(குறித்த)கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
எப்படியும் (என் வழியாய்) செய்து முடிப்பீர்