Eththanai Nanmai Enakku | எத்தனை நன்மை எனக்கு

எத்தனை நன்மை எனக்கு செய்தீர் நல்லவரே
எப்படிப்பா உமக்கு நான் நன்றி சொல்வேன்

நன்றி நன்றி கோடி நன்றி (எத்தனை)

தடுமாறி போன நிலையில் தாங்கினீரையா
தகப்பனைப் போல பரிவு காட்டி தூக்கினீரையா (எத்தனை)

ஆதி அன்பு எனக்குள்ளே குறைந்து போனதே
ஆனாலும் எண்ணாது நன்மை செய்தீரே (எத்தனை)

மங்கி மங்கி எரிந்த போதும் அணைக்காதிருந்தீர்
தெரிந்துபோன நாணல் வாழ்வை முறிக்காதிருந்தீர் (எத்தனை)

உம் சத்தம் கேட்டு சித்தம் செய்ய மறந்தேனய்யா
ஆனாலும் சகித்துக் கொண்டு நடத்தினீரையா (எத்தனை)

வலது பக்கம் இடது பக்கம் சாயும்போதெல்லாம்
உம் வார்த்தையாலே வழுவாது காத்துக் கொண்டீரே (எத்தனை)

உயிரோடு இருக்கும் வரை உம்மைப் பாடுவேன்
உம் அதிசயங்களை எடுத்துச் சொல்லுவேன் (எத்தனை)

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS