எழும்பிடுவாய் ஒ திருச்சபையே
எழும்பிடுவாய் ஜெப வீரர்களை
பூரண சுவிசேஷ வீரர்களாய்
புறப்படட்டும் எங்கும் அணியணியாய்
இயேசுவுக்காய் பெரும் சேனை ஒன்றை
இந்திய நாட்டில் திரட்டிடுவோம் – நாம்
சிலுவைக் கோடி பிடித்தே – அல்லேலூயா
சீயோனின் பாதைச் செல்வோம்
களைப்பினை மேற்கொள்ள கர்த்தரின் பாதத்தில்
காத்திருந்தே புது ஆசீர் பெறுவோம் நாம்
கழுகினைப்போல் பறந்தே – அல்லேலூயா
கர்த்தரின் சேவை செய்வோம்
இயேசுவின் பின்னே ஓடிடுவோமே
இயேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே – நம்
தியாகத்தின் பாதையிலே – அல்லேலூயா
தினமும் நடத்திடுவோம்
ஆவியினால் எப்பொழுதும் நிறைந்தே
ஆவியின் வரங்களை உடையோராய் – நாம்
ஆயத்தமாக நிற்போம் – அல்லேலூயா
ஆர்ப்பரித்தே மகிழ்வோம்
எதிரியின் சேனைக்குள் பாய்ந்தே செல்வோம்
எதிரியின் கொட்டைகளை தகர்த்தெறிவோம் – நாம்
எதிரியை வீழ்த்திடுவோம் – அல்லேலூயா
எழுதின பட்டயத்தால்
பாவத்தின் சிறைகளில் வாடிடும் மக்களை
பாவத்திலிருந்தே விடுதலை செய்வோம் – நாம்
பரிசுத்தர் கூட்டமொன்றை -அல்லேலூயா
பரமனுக்காய் சேர்ப்போம்
எக்காள சத்தம் தொநித்திடும் வேளை
எதிர் கொண்டு இயேசு ராஜனை சிந்திப்போம் – நாம்
மேகத்தில் ஏறிச் செல்வோம் – அல்லேலூயா
மேதினியை ஆண்டிட