Geetha Saththaththaal | கீத சத்தத்தால்

Loading

கீத சத்தத்தால் கெம்பீரமகவே
கீர்த்தனம் செய்வேன் கர்த்தரை என்றுமே

அனுபல்லவி

ஆனந்தமாகவே ஆர்ப்பரிப்புடனே – நித்
யானந்தரை நான் நிதமும் பாடுவேன்

வீணையினாலும் தம்புருவினாலும்
கின்னரத்தாலும் என் நாவினாலும்
சுரமண்டல தொனியும் முழங்க
சீரேசு நாதனை சிறப்பாய் பாடுவேன்

பத்து நரம்பு போதாதென்றெண்ணியே
மெத்தவும் மனம் துதியால் நிறைந்தே
உத்தம ஆசீர் உள்ளத்தில் பெற்றிட
உன்னத தேவனை உயர்த்தித் துதிப்பேன்

நானிலந்தன்னில் நல் ஏசுவின் எல்லா
நன்மைகளையும் ஒவ்வொன்றாய் எண்ணியே
நன்றியினாலேன் இதயம் பொங்கிட
நடனமாடியே ஆவியில் மகிழ்வேன்

தேவ ஆவியால் இன்னிசை நாதங்கள்
ஏக சத்தியமாய் இசைந்திலடங்கிட
தேவ மகிமை மேகமாய் இறங்க
தேவாதி தேவனை புகழ்ந்து போற்றுவேன்

தேவ சேவைக்காய் மகிமை சாட்சியாய்
ஜீவன் சுகம் என் பெலன் யாவும்
மேள வாத்திய மங்கள கீதங்கள்
எக்காள தொனியால் எங்கும் முழங்கவே

ஜெயங்கொண்டோனாய் சீயோன் சிகரத்தில்
ஜெய வீரனாம் எசுவுடனே நான்
தேவ சுரமண்டலம் கரத்தில் ஏந்தியே
ஜெயத்தின் கீதங்கள் களிப்பாய் பாடுவேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS