To Advertise Contact - christmusicindia@gmail.com

Geetham Geetham | கீதம் கீதம்

Loading

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம்

அனுபல்லவி
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் – அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ

பார் அதோ கல்லறை மூடினப் பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் – அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நதி முன் – ஆ ஆ

வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுவோம் தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு – ஆ ஆ

அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா
பூத கணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார் – ஆ ஆ

வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகின்றார் ஜெய வீரன் நம்
மேள வாத்தியம் கைம்னிப் பூரிகை
எடுத்து முழங்கிடுவோம் – ஆ ஆ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS