அழகான படைப்பே
அட அமுதே உனக்கென்ன கோவமா?
பொன் முகத்தின் சிரிப்பே
உன் முகத்தில் இது என்ன சோகமா ?
சத்தியத்தை நீ புரிஞ்சா
அதுல பெரும் அதிசயம் காத்திருக்கு
அதில் சொல்லும்படி நீ நடந்தா
உனக்கு பெரும் புதையலும் காத்திருக்கு
மலரே உன் கண்ணீரை துட
சிறகே உன் சோகத்தை மற
படைப்பே உன்னை படைத்தவரை பார்த்து
உன் பழசெல்லாம் ஒதுக்கிட்டு
சோகத்தை மறந்துட்டு
இயேசுவை நீ பாடு
வாழ்க்கையில் உள்ள சோகமெல்லாம்
அவரு தீர்ப்பாரு
இங்கே நீயும் நானும் நல்லாருக்க
அவரு வந்தாரு
ஒரு வார்த்தை ஒன்னு போதும் உனக்கு
எல்லாம் செய்வாரு
இதை நீயும் நானும் நம்புனாலே
வாழ்க்கையே ஜோரு
ஓடு நில்லாம
சிலுவையில உனக்காய் எல்லாம்
செஞ்சி முடிச்சாரு
பாடு சலிக்காம
பரம தகப்பன் உன்னை இன்று
கட்டி அணைப்பாரு
ஆ அழகான படைப்பே
அட செல்லம் உனக்கென்ன கோவமா?
கண்மணியின் சிரிப்பே
உன் முகத்தில் இது என்ன சோகமா ?
சத்தியத்தை நீ புரிஞ்சா
அதுல பெரும் அதிசயம் காத்திருக்கு
அதில் சொல்லும்படி நீ நடந்தா
உனக்கு பெரும் செல்வமும் காத்திருக்கு
மலரே உன் கண்ணீரை துட
மணியே உன் சோகத்தை மற
மனமே உன்னை படைத்தவரை பார்த்து
உன் பழசெல்லாம் ஒதுக்கிட்டு
சோகத்தை மறந்துட்டு
இயேசுவை நீ பாடு-வாழ்க்கையில்