To Advertise Contact - christmusicindia@gmail.com

Idaividaamal Thuthippom | இடைவிடாமல் துதிப்போம்

Loading

இடைவிடாமல் துதிப்போம்
இன்பம் ஏற்றதும் அதுவாகும்

எரிகோ மதிலைக் கீழே அன்று
வீழ்த்தினார் துதியாலே
அரண்களைத் தகர்த்தெறியும் – வல்ல
ஆயுதம் அதுவாகும்

சீரியாவின் சேனை – அன்று
அழிந்ததும் துதியாலே
யோசபாத்தின் சேனை – ஜெபம்
அடைந்ததும் துதியாலே – இடைவிடாமல்

பவுல் சீலாவைப் போல – வரும்
துன்பத்தில் துதி பாடு
கசந்த வாழ்வே மாறும் நம்
கவலையாவும் தீரும் – இடைவிடாமல்

கஷ்டமதிலும் துதிப்போம் பெரும்
நஷ்டத்திலும் துதிப்போம்
நிந்தையினிலும் மகிழ்வோம் வரும்
எந்த வினையும் அகலும் – இடைவிடாமல்

ஆபிரகாம் போல – அவர்
வாக்கை நம்பியே துதிப்போம்
வேகம் இயேசு வருவார் – அவர்
வாக்கின்படியே அருள்வார் – இடைவிடாமல்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS