Idukkamaana Vaasal | இடுக்கமான வாசல்

இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்

வாழ்வுக்கு செல்லும் வாசல்
இடுக்கமானது…….
பரலோகம் செல்லும் பாதை
குறுகலானது….                     –  சிலுவை

நாம் காணும் இந்த உலகம்
ஒருநாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம்

இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு

அழிவுக்கு செல்லும் வாயில்
மிகவும் அகன்றது
பாதாளம் செல்லும் பாதை
மிகவும் விரிந்தது

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS