Immattum | இம்மட்டும்

இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிட மாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்

ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்

இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS