To Advertise Contact - christmusicindia@gmail.com

Indrum Endrum Maaridaatha | இன்றும் என்றும் மாறிடாத

Loading

இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே
ஜீவனீன்தீரல்லோ அன்பினால்
திவ்ய வாக்கு தத்தம் தந்தெம்மை ஸ்திரப்படுத்தி
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே

பல்லவி
இயேசுவே என்னை நீர் ஆசீர்வதியும்
சௌக்யமீந்திடும் நான் நம்பி வந்தேனே

அன்பினால் சகேயுவை அழைத்துமே
அன்று இரட்சிப்பளித்திட்டீரே
இன்று யான் பெறவே உம்மாரிடா சந்தோஷமே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே – இயேசுவே

ரோகிகளின் ஏற்ற நல்ல வைத்தியரே
தேகமதில் காயமேற்றீரே
என்னை சுகமாக்க நின் வான் கரத்தை நீட்டியே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே – இயேசுவே

வாவென்று அழைத்த வல்ல சத்தமே
லாசரை உயிர்ப்பித்ததுவே
என்னை உயிர்பித்த அவ்வல்ல வாக்குரைத்துமே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே – இயேசுவே

யாவுமெனக்காய் முடித்த இயேசுவே
யாருண்டு இப் பாரில் உம்மைப்போல்
உம் மகிமை சாயல் இம்மண் சரீரம் பெற்றிட
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே – இயேசுவே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS