Inthak Kallin Mel En | இந்தக் கல்லின் மேல் என்

இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்
பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ளுவதில்லை

கூடார மீதில் இறங்கிய மேகம்
தேவாலயத்தை நிரப்பிய மகிமை
மேல் வீட்டில் வந்ததோர் பலத்த அக்கினி
கூடி வந்தோரை நிறைத்த ஆவி

தேவன் தமது சபையை கட்டுகிறார்

ஆவியின் வல்லமை அனைவரில் இறங்க
ஜீவன் பெற்ற கற்களாய் எழும்ப
கட்டுவார் சபையை மாளிகையாக
மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேலே

அக்கினி ஆவியில் எழும்பும் வரங்கள்
சத்திய சபைக்குத் தருவார் தேவன்
அற்புதம் வெளிப்படும் அப்போஸ்தலரால்
கர்த்தர் இயேசுவின் கிருபையில் நிறைந்தே

கிறிஸ்துவின் நிறைவில் வளர்ச்சி பெறவே
சபையில் சீர்பெறும் பரிசுத்தவான்கள்
பக்தி விருத்தி அடைவதே பாக்கியம்
பரம தேவனின் தாசர்களாலே

தேவனின் தானங்கள் ஒன்று சேர்ந்திடவே
தேவாதி தேவனின் மகிமையைக் காண
உத்தம ஈவால் உயருமே ஊழியம்
சித்தமே செய்வார் சிறந்தவராக்கி

கிறிஸ்துவுக்காக பாடுகள் சகித்தால்
கிறிஸ்துவினாலே ஆறுதல் அடைவோம்
உபத்திரவப் பாதையில் உத்தம ராஜ்யம்
உவந்தே செல்வோம் மகிமையில் சேர

பலவித சோதனை பாங்குடன் வந்தும்
பரவசம் கொள்வோம் பாடி ஜெயிப்போம்
ஆவியின் பெலத்தால் சாத்தானை அழிப்போம்
ஜெயித்தே செல்வோம் ஜெபவீரராய் நாம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS