Inthak kallin Mel | இந்தக் கல்லின் மேல்

Loading

இந்தக் கல்லின் மேல் – இயேசு கிறிஸ்து
சபையைக் கட்டுவார்
பாதாளத்தின் வாசல்கள் – அதை
மேற்கொள்ளாதே (2)

பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா (4)

சரணங்கள்
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பிடும் தேவ சபை
சத்தியத்திற்கு தூணுமான
ஆதாரமான சபை (2) – அல்லேலூயா

கரையற்றதும் திரையற்றதும்
கற்புள்ளதான சபை
கர்த்தராம் இயேசுவின்
மணவாட்டியான சபை (2) – அல்லேலூயா

பிழையற்றதும் குறைவற்றதும்
மகிமையால் நிறைந்த சபை
சாத்தானின் கோட்டைகளை
தகர்த்திடும் தேவசபை (2) – அல்லேலூயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS