Ippothaan Aarambamae! | Prophetic New Year Song 2024 | Rev. Alwin Thomas | #tamilchristiansongs – Lyrics

ஆராய்ந்து முடியாத பெரிய காரியம்
எண்ணி முடியாத அற்புதங்களும் (2)
நிறைவேறும் காலம் வந்துவிட்டது
நிச்சயமாய் உன் கண்கள் பார்க்கப்போகுது (2)

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே
இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே

1. வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றாலும்
வாக்குத்தத்தம் தாமதங்கள் ஆனாலும் (2)
வானம் பூமி ஒழிந்தாலும் வார்த்தை மாறாதே
உன்னில் துவங்கிய நற்கிரியை நிறைவாய் முடிப்பாரே

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே
இப்பதான் ஆரம்பமே எல்லாமே அற்புதமே

2. முயற்சி எல்லாம் தோல்வியாக முடிந்தாலும்
இரவெல்லாம் கண்ணீர்விட்டு அழுதாலும் (2)
காலை வந்ததால் சந்தோஷம் உன்னை நிரப்பிடுமே
கனவுகள் எல்லாம் நிறைவேற்றி இயேசு மகிழச் செய்வாரே

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே (2)

புது கிருபை இறங்கியே
புது பெலத்தால் மூடுதே
புது வழிகள் திறக்குதே
என் நேரம் வந்ததே (4)

இப்பதான் ஆரம்பமே எல்லாமே நிறைவேறுமே (4)

error: Content is protected !!
ADS
ADS
ADS