Iraajareega Gaembeerath | இராஜரீக கெம்பீரத்

இராஜரீக கெம்பீரத் தொனியோடே
ராஜ ராஜனை தேவ தேவனை
வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி
வீரசேனைக் கூட்டமாகச் சேவிப்போம்

அனுபல்லவி
மெய்ச் சீஷராக ஏசுவின் பின் செல்லுவோம்
முற்று முடிய வெற்றியடைய
சற்றும் அஞ்சிடாமல் ஏசு நாமத்தில்
சாத்தானை தோற்கடித்து மேற் கொள்வோம்

சூலமித்தி இரண்டு சேனைக் கொப்பாக
சூரியனைப் போல் சந்திரனைப் போல்
கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க
கீதம்பாடி ஜெயம் பெற்றுச் செல்கிறார் – மெய்

செங்கடல் நடுவிலே நடத்தினார்
எங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர்
கடலைப் பிளந்து நதியைப் பிரித்து
காய்ந்து நிற்கும் பூமியில் நடத்துவார் – மெய்

தாவீதை விரட்டிடும் சவுல் கைகள்
தளர்ந்திடவே அடங்கிடவே
பிலேயாமின் சாபம் பறந்தோடிப் போம்
பரிசுத்தவான்களே கெம்பீரிப்போம் – மெய்

பரலோக வாசிகள் சுதேசிகள்
பரதேசிகள் சில சீஷர்கள்
பின் திரும்பிடாமல் விட்டதைத் தொடாமல்
பற்றும் விசுவாசத்தோடு முன் செல்வோம் – மெய்

ஜெயமே எமது அஸ்திபாரமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஆவியில் ஜெபிப்போம் அற்புதங்கள் காண்போம்
ஆச்சரியமாகவே நடத்துவார் – மெய்

குணசாலிகள் கூடார வாசிகள்
கூட்டமாகவே கூடிச் சேரவே
மணவாளனை நம் மன்னன் ஏசுவைத் தம்
மங்கள சுபதினம் கண்ணால் காண்போம் – மெய்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS