To Advertise Contact - christmusicindia@gmail.com

Iranthorai | இறந்தோரை

Loading

இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்
எனக்குள் வந்து தங்கிவிட்டார்
இல்லாதவரை இருக்கச்செய்யும் நல்லவர்
மனக்கண் திறந்துவிட்டார்

அல்லேலூயா ஆனந்தமே

செடியான கிறிஸ்துவோடு இணைந்துவிட்டேன்
கொடியாக அவருக்காய் படர்ந்திடுவேன் – அல்லேலூயா

பாவம் சாவு இவற்றினின்று மீட்கப்பட்டவன்
இனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை

இயேசுகிறிஸ்து பெயராலும் ஆவியாலும்
நீதிமானாய் கழுவப்பட்டு தூய்மையானேன்

மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன்
ஆவி தாங்கும் ஆலயமாய் வளர்கின்றவன்

கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவா
அவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவா

புதிதாய் பிசைந்து புளிப்பில்லா மாவு நானே
துர்க்குணங்களை தீமைகள் தவீர்த்துவிட்டேன்

பழைய மனிதன் சிலுவையிலே அறையப்பட்டதால்
பாவத்திற்கு அடிமையாக வாழ்வதில்லை

தூய ஆவி துணையாலே வாழ்கின்றவன்
ஆவிகாட்டும் நெறியிலே நடக்கின்றவன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS