Irattippaana Nanmaigal | இரட்டிப்பான நன்மைகள்

பல்லவி
இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே

அனுபல்லவி
முன் மாரிமேல் பின் மாறி மழையே
உன்னதத்திநின்று வந்திறங்குதே

பெலத்தின் மேலே மா பெலனே
புது பெலன் நாம் பெற்றிட
சால்வைதனை எலிசா அடைந்தாற் போல்
சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம் – இரட்டிப்

கிருபையின் மேல் மா கிருபை
கர்த்தரிடம் நாம் பெற்றிட
ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்யம்
ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம் – இரட்டிப்

ஜெயத்தின் மேலே மா ஜெயமே
ஜெய தொனியாய்ப் பெற்றிட
போர் முனையில் சிறு தாவீது போல
போர் வீரராக என்றும் ஜெபிப்போம் – இரட்டிப்

நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
நல் விசுவாசம் பெற்றிட
ஆதி அப்போஸ்தலர்கள் காலம் நடந்த
அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம் – இரட்டிப்

பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
பங்கமில்லாமல் பெற்றிட
நீதியின் சூரியன் ஏசுவுடனே
நீதி அணிந்து என்றும் ஆளுவோம் – இரட்டிப்

மகிமையின் மேல் மகிமை
மறுரூபம் நாம் பெற்றிட
கண்ணிமை நேரத்திலே பறந்தேகி
கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம் – இரட்டிப்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS