Isravel En Janame | இஸ்ரவேல் என் ஜனமே

Loading

இஸ்ரவேல் என் ஜனமே என்றும்
இடறிட வேண்டாம்
யேகோவா உன் தெய்வமானால்
ஏதும் பயம் வேண்டாம்

ஓங்கும் புயமும் பலத்த கரமும்
உன் பக்கமே யுண்டு
தாங்கும் கிருபை தயவு இரக்கம்
தாராளமாயுண்டு – இஸ்ரவேல்

பார்வோன் கைக்கு விடுத்து மீட்ட
பஸ்கா ஆட்டுக்குட்டி
ஆரோன் மோசே என்னும்நல்ல
ஆசாரியர் உண்டு – இஸ்ரவேல்

செங்கடலில் வழி திறந்த
சீயோன் நாயகனே
பங்கமின்றி பாலைவனத்தில்
பராமரித்தாரே – இஸ்ரவேல்

சத்துருக்களை சிதறி அடித்த
சர்வ வல்ல தேவன்
யுத்தத்தில் உன் முன்னே சென்று
ஜெயமெடுத்தாரே – இஸ்ரவேல்

பயப்படாதே சிறு மந்தையே
பார் நான் உன் மேய்ப்பன்
தயங்காதே மனம் கலங்காதே உன்
தேவன் தினம் காப்பேன் – இஸ்ரவேல்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS