To Advertise Contact - christmusicindia@gmail.com

Isravelae | இஸ்ரவேலே

Loading

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
அரணும், சுகமும், பெலமும் நானே

உன்னை நானே உருவாக்கினேன்
என்னையல்லால் தேவனில்லை
எதற்குமே நீ அஞ்சிடாதே
எண்ணி எதையும் கலங்கிடாதே – இஸ்ரவேலே

தெர்ந்து கொண்டேன் நீ என் தாசன்
திக்கற்றோனாய் கைவிடேனே
தாய் தன் சேயை மறந்தபோதும்
மறப்பதில்லை உன்னை நானே – இஸ்ரவேலே

ஆறுகளை நீ கடக்கும்போது
அவைகள் உன்மேல் புரளுவதில்லை
அக்கினியில் நீ நடக்கும்போது
அவைகள் உன்னைப் பற்றிடாதே – இஸ்ரவேலே

சிறு மந்தையே பயப்படாதே
சீக்கிரமாய் வந்திடுவேன்
சீயோனிலே உயர்த்தி உன்னை
பேரை பெருமைப் படுத்திடுவேன் – இஸ்ரவேலே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS