Ithu Athisayamae | இது அதிசயமே

பல்லவி
இது அதிசயமே எனக்கானந்தமே
இன்ப பரலோகம் துறந்தெனக்காய்
இகத்தில் இயேசுவே மனுவாய் உதித்தார்

சரணங்கள்
விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில்
உன்னையும் என்னையே தம் மனதில்
தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து
தயாபரனாய் தோன்றினார் – தேவ – இது

மானிடர் மன இருள் நீக்கிடும் மெய்
மாபிரபையோடிலங்கும் மகிபன்
மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்
தந்தாரே விந்தையிதே – கர்த்தர் – இது

சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே
சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார்
நன்றியோடே நானும் பாடிடுவேன்
தற்பரன் இயேசுவையே – எந்தன் – இது

பறந்திடும் பறவைக்கும் கூடு உண்டே
பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே
இயேசுவுக்கோ தலை சாய்த்திடவோ
எங்குமோர் ஸ்தலமுமில்லை – பூவில் – இது

சாந்தமும் தாழ்மையும் நீதியுமே
சிறப்புடன் விளங்கிடுதே அவரில்
இந்நுகமே எனக்கெந்நாளுமே
சொந்த மென்றேற்றிடுவேன் – என்றும் – இது

Close Menu
error: Content is protected !!