Ithuvarai Seytha Seyal | இதுவரை செய்த செயல்

Loading

இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2)

உவர் நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2) – இதுவரை

தனி மரமாக இருந்த என்னை
கனி மரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2) – இதுவரை

உம சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2) – இதுவரை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS