Iyaesu Devanai | இயேசு தேவனை

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே
இன்ப துதிகள் செலுத்திடுவோமே
எம்மை நேசிப்பவர் இவர் தாமே
எங்கள் ஆத்தும இரட்சகராமே
அல்லேலூயா (2)

கண்ணின் மணிபோல காத்தார்
கர்த்தர் எந்தன் நல் மேய்ப்பர்
சாலேமின் இராஜா சாரோனின் ரோஜா
சமாதானப் பிரபு நம் இயேசுவே (2) – இயேசு

தேவ சமாதானம் நதி போல்
தேவ வசனமோ பனி போல்
கன்மலை வெடிப்பில் தங்கிடும் சபையில்
கிருபையோடு வந்திறங்குதே (2) – இயேசு

நீதிமான்களைப் பனை போல்
நல்ல கனி தரும் மரம் போல
வேலி அடைத்திட்ட சிங்கார வனமாய்
வற்றாத நீருற்றாய் மாற்றுகிறார் – இயேசு

வாசிப்போம் தினம் வேதம்
நேசிப்போம் ஏசு நாமம்
இறுதிகாலம் விழிப்படைவோம்
இடைவிடாமல் ஜெபித்திடுவோம் – இயேசு

அந்தி கிறிஸ்துவே ஆளும்
அந்த மிருகத்தின் காலம்
நாசங்கள் மோசங்கள் நாளிலம் வருதே
நாமோ இப்பூமியை விட்டேகுவோம் – இயேசு

இயேசு நமக்காக வருவார்
மேகமீதினில் ஒரு நாள்
முந்திக் கொள்வோம் நாம் ஏசுவை சந்திக்க
மறுரூபமாய் பறந்திடுவோம் – இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS