Iyaesu En Nesar | இயேசு என் நேசர்

Loading

இயேசு என் நேசர் சாரோனின் ரோஜா
ஊற்றுண்ட தைலம் அவர் நாமம் (2)

கன்னியர் விரும்பும் பரிமளமிவர்
உத்தமர் நினைக்கும் உள்ளம் நிறைந்தவர்
எத்தனை பேரின்பம் அன்பரின் சிநேகம்
இதயம் மகிழ்ந்திடுதே (2) – இயேசு

காட்டு மரங்களில் கிச்சிலி மரம் போல்
களைத்த நேரத்தில் கர்த்தரின் சமூகம்
அவரின் நிழலில் தங்கியே மகிழ்வேன்
மதுர கனி தருவார் (2) – இயேசு

மேனியில் வெண்மையும் சிவப்பு மானவர்
ஆயிரமாயிரம் பேரில் சிறந்தவர்
பூரண ரூபமும் இன்பமு மானவர்
முற்றிலும் அழகுள்ளவர் (2) – இயேசு

மரணம் போலவர் நேசம் வலியதே
அக்கினி தழலாம் அவரின் நேசமே
அணைப்பதில்லையே திரண்ட தண்ணீரும்
ஆஸ்தியும் இணையில்லையே (2) – இயேசு

வருத்தம் பாடுகள் வேதனை சகித்தே
வாசனை வீசிடும் தூபஸ்தம்பமிவர்
வேகமே வருவார் மேகங்களுடனே
நேசரைச் சேர்ந்திடுவேன் (2) – இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS