Iyaesu Ennodu | இயேசு என்னோடு

இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதம்மா
நன்றி என்று சொல்லுதம்மா

ஆ…  ஆ…  ஓ….  ஓ….  லலல்லா-லாலா… ம்ம்…

கவலை கண்ணீரெல்லாம்
கம்ப்ளீட்டா மறையுதம்மா
பயங்கள் நீங்குதம்மா
பரலோகம் தெரியுதம்மா

அகிலம் ஆளும் தெய்வம் – என்
அன்பு இதய தீபம்

பகைமை கசப்பு எல்லாம்
பனிபோல மறையுதம்மா
பாடுகள் சிலுவை எல்லாம்
இனிமையாய் தோன்றுதம்மா

உலக ஆசை எல்லாம்
கூண்டோடே மறையுதம்மா
உறவு பாசமெல்லாம்
குப்பையாய் தோன்றுதம்மா

எரிகோ கோட்டையெல்லாம்
இல்லாமல் போகுதம்மா
எதிர்க்கும் செங்கடல்கள்
இரண்டாய் பிரியுதம்மா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS