To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyaesu Kiristhuvin Nal | இயேசு கிறிஸ்துவின் நல்

Loading

இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல் படுவோம்

மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையை செம்மையாக்குவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல் படுவோம்

சாத்தானின் சதிகளை தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்த பார் முழுவதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல் படுவோம்

ஆவி ஆத்துமாதேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல் படுவோம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS