To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyaesu Nammodu | இயேசு நம்மோடு

Loading

இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே
அல்லேலூயா அகமகிழ்வோமே

காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்
கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்
உலகின் ஒளிநாமே

வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே
தேவனின் வார்த்தை உண்டு
அவரின் தூய தழும்புகளால்
குணம் அடைகின்றோம் நாம்

மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்
மனமோ தளர்வதில்லை
கோதுமை மணிபோல் மடிந்திடுவோம்
சிலுவையைச் சுமந்திடுவோம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS