To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyaesu Neenga | இயேசு நீங்க

Loading

இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதில்லை
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க

சமாதான காரணர் நீங்கதானே
சர்வ வல்லவரும் நீங்கதானே

அதிசய தேவன் நீங்கதானே
ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே

தாயும் தகப்பனும் நீங்கதானே
தாங்கும் சுமைத்தாங்கி நீங்கதானே

எனக்கு அழகெல்லாம் நீங்கதானே
எனது ஆசையெல்லாம் நீங்கதானே

இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே
இரட்சிப்பின் தேவன் நீங்கதானே

எல்லாமே எனக்கு நீங்கதானே
எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே

முதலும் முடிவும் நீங்கதானே
முற்றிலும் காப்பவர் நீங்கதானே

வழியும் சத்தியமும் நீங்கதானே
வாழ்வளிக்கும் வள்ளல் நீங்கதானே

பாவமன்னிப்பு நீங்கதானே
பரிசுத்த ஆவியும் நீங்கதானே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS