To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyaesu Periyavar Nam | இயேசு பெரியவர் நம்

Loading

இயேசு பெரியவர் – நம்
இயேசு பெரியவர் – 2
என்றென்றும் இயேசு பெரியவர் – அவர்
ஒருபோதும் கைவிடமாட்டார் – அல்லேலூயா – 2

மனுஷரைப் பார்க்கிலும் இயேசு பெரியவர்
பிரபுக்களைப் பார்க்கிலும் இயேசு பெரியவர் – 2
செல்வங்களைப் பார்க்கிலும் இயேசு பெரியவர்
பாட்டம் பதவி பார்க்கிலும் இயேசு பெரியவர் – இயேசு பெரியவர்

அதிசயங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
அற்புதங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
நம்பினோரை வாழவைக்கும் இயேசு பெரியவர்
நம்பிக்கையின் நங்கூரம் இயேசு பெரியவர் – இயேசு பெரியவர்

உனக்குள்ளே இருக்கின்ற இயேசு பெரியவர்
உலகிலுள்ள சாத்தானிலும் இயேசு பெரியவர்
உறங்காமல் காத்திடும் இயேசு பெரியவர்
உன் குறைவை நிறைவாக்கும் இயேசு பெரியவர் – இயேசு பெரியவர்

யோனாவிலும் பெரியவர் என்று பாடிடு
சாலமோனிலும் பெரியவர் என்று கூறிடு
தேவாலயத்திலும் பெரியவர் என்று எண்ணிடு
பெரிய காரியங்களை எதிர்ப்பார்த்திடு – இயேசு பெரியவர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS