Iyaesu Raajaa Ithayaththin | இயேசு ராஜா இதயத்தின்

இயேசு ராஜா இதயத்தின் ரோஜா
உம்மை நான் பாடிடுவேன் ஓயாமல் துதித்திடுவேன் – 2

செய்த நன்மைகள் நினைக்கும் போது
கண்களில் கண்ணீர் வடிகிறதே
செந்நீர் வடித்த பாதம் பணிந்து
தொழுதிட உள்ளம் துடிக்கின்றதே

வல்ல பிதாவே உமக்கு ஆராதனை
வான் புறாவே உமக்கு ஆராதனை
எந்தன் பாவம் எந்தன் சாபம்
யாவையும் சிலுவையில் சுமந்திட்டீரே

உந்தன் காயம் என்னை சுகமாய்
ஆக்கிட வழியும் திறந்திட்டீரே
சுகமாக்கும் தெய்வமே ஆராதனை
வியாதி முற்றும் விளக்கிடுவீர் ஆராதனை

எனக்குள் வந்து எனக்குள் வாழ்ந்து
என்னையும் உம்மைப் போல் மாற்றினீரே
இதயப் பலகையில் உந்தன் வசனம்
எழுதி என் உயிரில் கலந்திட்டீரே

வார்த்தையின் வடிவே ஆராதனை
வானம் பூமி படைத்தவரே ஆராதனை
பொங்கும் நதி நீர் புதிய ஆவியால்
எந்தன் உள்ளம் நிறைந்திட்டீரே

பாய்ந்து சென்று இயேசு அன்பை
உலகமெங்கும் சொல்லிட அருள் செய்தீரே
ஊற்றுண்ட தைலமே ஆராதனை
உதவிடும் கன்மலையே ஆராதனை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS