Iyaesu Raja Vanthirukkiraar | இயேசு ராஜா வந்திருக்கிறார்

Loading

இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும் கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம்

கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகலேல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார் – கொண்டாடுவோம்

மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கின்றார்
ஓடிவா என் மகனே (ளே)

கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
என்னாமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார்

நோய்களெல்லாம் நீக்கிடுவார்
நொடிப்பொழுதே சுகம் தருவார்
பேய்களேல்லாம் நடுநடுங்கும்
பெரியவர் திரு முன்னே – நம்ம

பாவமெல்லாம் போக்கிடுவார்
பயங்கலேல்லாம் நீக்கிடுவார்
ஆவியினால் நிரப்பிடுவார்
அதிசயம் செய்திடுவார்

கசையடிகள் உனக்காக
காயமெல்லாம் உனக்காக
திரு இரத்தம் உனக்காக
திருந்திடு என் மகனே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS