Iyaesu Unnai Azhaikkiraar | இயேசு உன்னை அழைக்கிறார்

பல்லவி
இயேசு உன்னை அழைக்கிறார்
இன்ப தோணி பின் வாராயோ
இன்னல் தீர்க்க வல்லவரை
இன்று நீ நம்பிடுவாய்

சரணங்கள்
வருந்தி பாரங்கள் சுமந்த நீ
விரும்பி சிலுவை நோக்கியே பார்
அருமை ஆண்டவர் உனக்காக
சிறுமை அடைந்து உயிர்தந்தாரே – இயேசு

உன் கையில் நீ செய்த பாவத்திற்காய்
தன் கையில் ஆணிகள் பாய்ந்திடவே
முள் முடி சூடினார் உன் வினைக்காய்
மன்னிப்பு இரட்சண்யம் உனக்களிப்பார் – இயேசு

மனந்திரும்பி நீ மாறினாலோ
மறுபிறப்பை நீ கண்டடைவாய்
இயேசுவை உன் ஆத்ம இரட்சகராய்
ஏற்றுக்கொள் கிடைக்கும் சமாதானமே – இயேசு

வல்லமை உண்டவர் இரத்தத்திலே
வியாதியின் வேரும் கூரும் முறியும்
கர்த்தரின் காயங்கள் தழும்புகள்
சுத்தமாய் உன்னையும் குணமாக்கிடும் – இயேசு

சத்திய பரனே அழைக்கிறார்
நித்திய ஜீவனை ஈந்திடுவார்
இயேசுவாலாகத தொன்றுமில்லை
இப்போதும் உன் தேவை வேண்டிக் கொள்வாய் – இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS