Iyaesuvae En Deivamae | இயேசுவே என் தெய்வமே

இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும்

நான் பாவம் செய்தேன்
உம்மை நோகச் செய்தேன்
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்
என்னை மன்னியும் தெய்வமே (2)

உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன்
உம் வல்லமை இழந்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே

முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர்
நீர் எனக்காக பலியானீர்
உம் இரத்தத்தால் கழுவி விடும்

துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன்
உம்மை நினையாது தூரப் போனேன்
என்னை மன்னியும் தெய்வமே – இந்த
ஒரு விசை மன்னியுமே

அநியாயம் செய்தேன்
கடும் கோபம் கொண்டேன்
பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா
என்னை மன்னியும் தெய்வமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS