To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyaesuve Vazhi | இயேசுவே வழி

Loading

இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே ஒளி நித்தியம் தேவன்
புது வாழ்வு எனக்குத் தந்தார்
சமாதானம் நிறைவாய் அளித்தார்
பாவங்கள் யாவும் மன்னித்தார்
சாபங்கள் யாவும் தொலைத்தார்

கல்வாரி மீதில் எனக்காய்
தம் உதிரம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார்
உன்னதத்தில் அமர்ந்தார் – இயேசுவே

நல் மேய்ப்பனாக காத்தார்
என்னை தமையனாக கொண்டார்
என் நண்பனாக வந்தார்
என் தலைவனாக நின்றார்

மேகங்கள் மீதில் ஓர் நாள்
மணவாளனாக வருவார்
என்னை அணைத்துக் கொள்வார்
வானில் கொண்டு செல்வார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS