Iyaesuvin Naamaththil | இயேசுவின் நாமத்தில்

பல்லவி
இயேசுவின் நாமத்தில் நாம்
கூடிடும் சமயங்களில்
பேசுவார் தியானத்திலே
அவர் தம் கிருபைகள் அளிக்க

மலைகள் விலகினாலும்
மாபர்வதம் நிலை பெயர்ந்தும்
என்றும் மாறாத அவர் கிருபைகள்
தம் மக்களுக்காறுதலே

சீயோனில் அவர் நம்மையே
சிறுமந்தையாய் சேர்த்திடுவார்
நித்திய ராஜ்யத்தை தந்திடுவார்
சத்திய பாதையில் நடந்ததினால்

கஷ்டங்கள் கவலைகளில்
அன்புக்கரம் நம்மை தாங்கிடுமே
கஷ்டங்கள் மாறிடுமே
நாதன் இயேசுவின் நாமத்தினால்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS