Iyesu Devanai Thuthiththiduvom | இயேசு தேவனை துதித்திடுவோம்

Loading

இயேசு தேவனை துதித்திடுவோம்
இயேசு ராஜனை வாழ்த்திடுவோம்
இதயம் போங்க நன்றியுடனே
போற்றி உயர்த்தி பணிந்திடுவோம்

வார்த்தை வடிவாய் வந்தவரை
வாதைப் பிணியை தீர்த்தவரை
கண்ணின் மணிபோல் காத்த தயவை
கருணை உருவைத் துதித்திடுவோம் – இயேசு

அடிமை ரூபம் எடுத்தவரை
அகிலம் பணிந்திடவே செய்தவரை
உயர்ந்த நாமம் பெற்று விளங்கும்
உன்னதர் அவரைப் போற்றிடுவோம் – இயேசு

இருளை நீக்கும் மாஜோதியாய்
உலகில் வந்த அருள் வடிவை
ஜீவ ஒளியாய் திகழும் அவரை
இன்றும் என்றும் துதித்திடுவோம் – இயேசு

தேவத்தன்மையை வெளிப்படுத்த
தேவ மைந்தனாய் வந்தவரை
தேவ சுதராய் நாமும் விளங்க
கிருபை உருவைத் துதித்திடுவோம் – இயேசு

பாவ சாப மரணத்தை
ஜெயித்து வென்று எழுந்தவரை
மகிமை சூழ திரும்பி வந்திடும்
வேந்தன் அவரைத் துதித்திடுவோம் – இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS