fbpx

Iyesu Endra Thiru Naamaththirku | இயேசு என்ற திரு நாமத்திற்கு

பல்லவி
இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்

வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு

வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே – இயேசு

பாவத்திலே மாலும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு

உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு

சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடை முற்றும் அகற்றிடும் நாமமது – இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS