Iyesu Nesikkiraar | இயேசு நேசிக்கிறார்

இயேசு நேசிக்கிறார்
அவர் அன்பாய் நேசிக்கிறார்
பாவி நான் என்றாலும்
தள்ளிவிடாமல் பாதுகாக்கின்றார்
கிருபை தருகின்றார்

அழைத்தேனே நெருக்கத்திலே
அன்போடு செவி கொடுத்தீர்
ஆபத்துக் காலத்திலேயே அரணான துணையானீர்
ஆத்துமத்தில் என்னை முழு மனதுடன்
அரவணைத்தாரே அன்பை அளித்தாரே – இயேசு

மாசற்ற தம் உதிரம் எனக்காக சிலுவையிலே
மனதார அளித்தவரை மனம் நோக செய்தேனே
மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை
மாற்றி அமைத்தாரே மகிழச் செய்தாரே – இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS