To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyesukiristhuvin Naamamithe | இயேசுகிறிஸ்துவின் நாமமிதே

Loading

பல்லவி
இயேசு கிறிஸ்துவின் நாமமிதே
இனிமையாமே இன்பமதுவே
ஏழைக்கும் ஆறுதலே

சரணங்கள்
நாமம் அதிசயமே தேவ தாசரின் புகலிடமே
நானிலந்தனிலே யாவரும் வணங்கிடவே
நாதன் இயேசுவின் நாமமதையே
நன்றியுடன் புகழ்வோம் – இயேசு

அளிப்பேன் யாவையுமே என் நாமத்தில் என்றனரே
அழிக்க வலியவனை வல்லமையுண்டதினாலே
களிப்போம் வல்ல நாமத்திலே
கனிந்தே பாடிடுவோம் – இயேசு

நோய்கள் நீக்கிடவும் நவ பாஷைகள் பேசிடவும்
சர்ப்பங்களை எடுக்க சக்தி ஈந்துதவும்
உத்தமர்கள் போற்றிப் புகழும்
கர்த்தரின் நாமமிதே – இயேசு

சாவுக் கேதுவான கொடும் நஞ்சைப் பருகிடினும்
சேதப் படுத்தாதே காக்க வல்லதுவே
நாதன் ஈந்த தைலமெனவே
நமக்கே ஊற்றுண்டதே – இயேசு

பாவ இருளதனைப் போக்கும் புண்ணிய நாமமதாய்
பாரில் இறங்கினாரே தேவனின் அன்பதுவே
இயேசு கிறிஸ்து நேசரிவரே
ஆசைக்குகந்தவரே – இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS