fbpx

Iyesuvae Aandavar | இயேசுவே ஆண்டவர்

இயேசுவே ஆண்டவர்
இயேசுவே ஆண்டவர்
இயேசுவே ஆண்டவர்
இயேசுவே ஆண்டவர்

வானம் பூமி யாவையும்
தம் வார்த்தையாலே படைத்தார் – 2
சர்வ சிருஷ்டியின் நாயகன் – 2
சர்வ லோகத்தின் ஆண்டவர் – இயேசுவே

நம் இயேசுவால் கூடாதது
ஒன்றுமே இல்லையே
அவரையே நம்புவோம்
என்றென்றும் ஆராதிப்போம் – இயேசுவே

இயேசு நீதி நிறைந்தவர்
சமாதான காரணர்
சர்வ வல்லவர்
சகல அதிகாரம் உடையவர் – இயேசுவே

நம் இயேசுவைப் போலவே
வேறே இரட்சகர் இல்லையே
நம் இரட்சண்ய கன்மலை
அவரே நம் தஞ்சமே – இயேசுவே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS