To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyesuve Unthan Maasillaa | இயேசுவே உந்தன் மாசில்லா

Loading

இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
எந்தனுக்காக சிந்தினீரே…. – 2
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ

மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பை துதிப்பேன்

என்மேல் பாராட்டின உமதன்புக்
கீடாய் என்ன நான் செய்திடுவேன்
நரகாக் கினையின் நின்று மீட்ட
சுத்த கிருபைகள் நித்தம் பாடுவேன்

எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல்
தாங்கக் கூடாத மா பாரமே
மன்னிக்கும் தயை பொருத்த என் தேவா
மன்னித்தும் மறந்தும் தள்ளினீர் – மா பாவியாம்

எந்தன் பாதங்கள் சறுக்கிடும் போது
வலக்கரத்தாலே தாங்குகிறீர்
மனபாரத்தால் சோர்ந்திடும் போது
ஜீவ வார்த்தையால் தேற்றுகிறீர் – மா பாவியாம்

எனக்காக நீர் யாவும் முடித்தீர்
உமக்காக நான் என்ன செய்வேன்
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
சிலுவை சுமந்து வருவேன் – மா பாவியாம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS