Iyesuvin Kudumbam | இயேசுவின் குடும்பம்

பல்லவி
இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
எழையுமில்லை பணக்காரன் இல்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்

பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்

இன்பமுண்டு சமாதானமுண்டு
வெற்றி உண்டு துதிபாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS