இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே
ஏகமாய் எழும்பிடுவீர் சபையே
நாசமின் னானிலத்தில் வருதே
தமக்கு முன் வைத்த மகிமை எண்ணி
தளராமல் பாடுகள் சகித்தவரை
நோக்கியே நாம் ஓடிடுவோம்
தாங்கியே காப்பாரே கடைசிவரை – இயேசுவுக்காய்
பாவத்தில் மாசானம் அழிகிறதே
லோகத்தின் இரட்சிப்பைக் கருதியே நாம்
நள்ளிரவோ நடுப்பகலோ
நருங்குண்ட ஆவியில் ஜெபித்திடுவோம் – இயேசுவுக்காய்
பேதுரு பவுலும் ஸ்தேவானும் அன்று
பெரும் ரத்த சாட்சியாய் மறித்தது போல்
புறப்படுவோம் ஏசுவுக்காய்
போர் முனையில் ஜீவன் வைத்திடவே – இயேசுவுக்காய்
ஒருவரும் கிரியை செய்ய இயலா
இருண்ட இராக்காலம் எதிர்படுமுன்
ஏகோபித்து எழும்பிடுவோம்
இயேசுவின் சத்தியம் சாற்றிடவே – இயேசுவுக்காய்
மேகத்தில் ஏசு தான் தோன்றிடும் நாள்
வேகத்தில் நெருங்கிடும் காலமிதில்
பரிசுத்தத்தைக் காத்துக் கொண்டே
பரமனுக்காய்க் கடும் சேவை செய்வோம் – இயேசுவுக்காய்