To Advertise Contact - christmusicindia@gmail.com

Jebam Kelum | ஜெபம் கேளும்

Loading

ஜெபம் கேளும் பதில் தாரும்
அதிசயம் செய்யும் ஐயா

நூறு கோடி என் ஜனங்கள்
ஏழுலட்சம் கிராமங்கள்
இயேசுவை காண வேண்டும்

உமக்கெதிராய் செயல்படுவோர்
உம பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்

இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்

நாடாளும் தலைவர்களை
நாள்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும்

மரித்துப் போன மனிதரெல்லாம்
உம குரலைக் கேட்டு இன்று
மறுவாழ்வு பெற வேண்டும்

மிஷனரி ஊழியர்கள்
மேன்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும்

சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும்

ஆளும் தலைவர்கள் கூட்டம்
உம நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS