To Advertise Contact - christmusicindia@gmail.com

Jebame En Vaazhvin | ஜெபமே என் வாழ்வின்

Loading

ஜெபமே என் வாழ்வின் செயலாக மாற
ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஜெப சிந்தை எனில் தாருமே

இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
பொறுமையுடன் காத்திருந்தே
போராடி ஜெபித்திடவே

சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
சோதனையிலும் சோர்ந்திடா ஜெபிக்க
மாமிசத்தின் பெலவீனத்தில்
ஆவியின் பெலன் தாருமே

எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கு
துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
உபவாசம் என்னில் தாருமே

முழங்காலில் நின்றே முழுமனதுடனே
விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க
உம் வருகை நாளதிலே
உம்முடன் சேர்ந்திடவே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS