Jebaththaik Ketkum | ஜெபத்தைக் கேட்கும்

Loading

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மைக் காணச் செய்யும்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவயத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

ஊக்கத்துடனே ஊர் முகமாய்
வாக்குத்தத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்யும் – ஜெபமே

ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வாகான தாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடு வேண்டிக் கொள்வோம் – ஜெபமே

இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூறேல்லாம் நீக்கி விடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம் – ஜெபமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS